காவலன்

காவலன் படத்தை வரும் 17ஆம் தேதி வெளியிடுவதாக அறைகூவல் விடுத்திருந்தார் படத்தை வாங்கியிருக்கும் ‘திடீ‌ர’ கோடீஸ்வரர் ஷக்தி சிதம்பரம்.

ஆனால் படம் 24ஆம் தேதிதான் வெளியாகும் என்று தகவல் கசிந்தது. ஆனால் நேற்றைய நிலவரம் இன்னும் மோசம். படம் பொங்கலுக்குதான் வெளியாகும் என்கிறார்கள்.

ஜெயலலிதா, எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பால் சந்தோஷத்தில் சதிராடிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விரைவில் விஜய் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்குப் பிறகு காவலனை வெளியிடாலம் என்று மேலிடம் கருத்து தெ‌ரிவித்ததையொட்டியே பொங்கலுக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்ததாகவும் கூறுகிறார்கள்.

காவலன் இப்போதைக்கு குழம்பிய குட்டை. தெ‌ளியும் வரை வலைவீசிக் கொண்டுதான் இருப்பார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...